கோத்தகிரியில் மேலும் ஒரு தனியார் பள்ளி கொரோனா சிகிக்சை மையமாக மாற்றம்
கோத்தகிரியில் மேலும் ஒரு தனியார் பள்ளி கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டு உள்ளது.
கோத்தகிரி
கோத்தகிரியில் மேலும் ஒரு தனியார் பள்ளி கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டு உள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை
கொரோனா 3-வது அலை மற்றும் ஒமைக்ரான் தொற்று பரவல் நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. நோய்தொற்றை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
தமிழகத்தில் நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்த ஞாயிற்று கிழமை களில் முழு ஊரடங்கு மற்றும் பிற நாட்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கபட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு வசதியாக தற்காலிக சிகிச்சை மையங்கள் திறக்கப்பட்டு வருகின்றன.
மற்றொரு பள்ளி மாற்றம்
கோத்தகிரியில் 32 படுக்கை வசதிகளுடன் தனியார் பள்ளி கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் மற்றொரு பள்ளியும் சிகிச்சை மையமாக மாற்றப்பட்டு வருகிறது. இதற்காக அங்கு தீவிர பணிகளும் மேற்கொள்ளப் பட்டு வருகிறது.
இதற்காக அங்கு கட்டில், மெத்தைகள் போடப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. இந்த பணிகளை தாசில்தார் சீனிவாசன், வருவாய் ஆய்வாளர் தீபக், கிராம நிர்வாக அலுவலர் மோகன்குமார், ஆகியோர் ஆய்வு செய்தனர்.
மேலும் வரும் திங்கட்கிழமைக்குள் 2- வது மையமும் தயார் நிலையில் இருக்கும் என அவர்கள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story