உரக்கடை உரிமையாளரிடம் ரூ.9 லட்சம் மோசடி; அக்காள், தம்பி உள்பட 4 பேர் மீது வழக்கு


உரக்கடை உரிமையாளரிடம் ரூ.9 லட்சம் மோசடி; அக்காள், தம்பி உள்பட 4 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 7 Jan 2022 9:56 PM IST (Updated: 7 Jan 2022 9:56 PM IST)
t-max-icont-min-icon

போடி அருகே உரக்கடை உரிமையாளரிடம் ரூ.9 லட்சம் மோடி செய்ததாக அக்காள், தம்பி உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

போடி:
போடி அருகே உள்ள போடிமெட்டு பகுதியை சேர்ந்தவர் முனியப்பன். இவர் அப்பகுதியில் உரக்கடை வைத்துள்ளார். இந்த கடையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தேவாரத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவர் வேலை செய்து வந்தார். கடந்த 2018-ம் ஆண்டு மணிகண்டன், முனியப்பனின் உரக்கடையில் ரூ.7 லட்சத்து 96 ஆயிரத்தை கையாடல் செய்ததாக கூறப்படுகிறது. 
அதேபோல் அவரது அக்காள் மீனா, தனது கணவர் குமாருடன் சேர்ந்து முனியப்பனின் கடையில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள பூச்சி மருந்துகளை வாங்கிவிட்டு, அதற்கான பணத்தை கொடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்து முனியப்பன் கேட்டபோது, அவர்கள் சரியான பதிலை கூறவில்லை. 
இதனால் மோசடி செய்யப்பட்டதை அறிந்த முனியப்பன், மணிகண்டன் மற்றும் மீனா, குமார் ஆகியோர் மீது போடி குரங்கணி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் மணிகண்டன், குமார், மீனா மற்றும் மோசடிக்கு உடந்தையாக இருந்ததாக மணிகண்டனின் மனைவி மீனா ஆகிய 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story