நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு மாநகராட்சி, பேரூராட்சிகள் வாரியாக வாக்குப்பதிவு எந்திரங்கள் ஒதுக்கீடு


நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு மாநகராட்சி, பேரூராட்சிகள் வாரியாக வாக்குப்பதிவு எந்திரங்கள் ஒதுக்கீடு
x
தினத்தந்தி 7 Jan 2022 10:02 PM IST (Updated: 7 Jan 2022 10:02 PM IST)
t-max-icont-min-icon

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு மாநகராட்சி, பேரூராட்சிகள் வாரியாக வாக்குப்பதிவு எந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

திண்டுக்கல்:
தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற இருக்கிறது. இதையொட்டி வாக்குப்பதிவுக்கு தேவையான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்க்கப்பட்டு தயாராக வைக்கப்பட்டு உள்ளன. இதையடுத்து உள்ளாட்சி அமைப்புகள் வாரியாக எந்திரங்களை ஒதுக்கும்படி மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. அதன்படி மாநிலம் முழுவதும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை ஒதுக்கீடு செய்யும் பணி நடக்கிறது. திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை திண்டுக்கல் மாநகராட்சி, பழனி, ஒட்டன்சத்திரம் மற்றும் கொடைக்கானல் ஆகிய 3 நகராட்சிகள், 23 பேரூராட்சிகள் உள்ளன.
இவற்றின் தேர்தலுக்காக மொத்தம் 747 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. மேலும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரங்கள் என மொத்தம் 5 ஆயிரம் எந்திரங்கள் தயாராக உள்ளன. இந்த நிலையில் தேர்தலில் பயன்படுத்த வசதியாக உள்ளாட்சி அமைப்புகள் வாரியாக நேற்று முன்தினம் வாக்குப்பதிவு எந்திரங்கள் ஒதுக்கப்பட்டன. மேலும் அவ்வாறு ஒதுக்கப்பட்ட எந்திரங்களை, உள்ளாட்சி அமைப்புகள் வாரியாக பிரிக்கும் பணி திண்டுக்கல் நேருஜி மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடைபெற்றது. இதில் மாநகராட்சி, 3 நகராட்சிகள், 23 பேரூராட்சிகளுக்கு தனித்தனியாக ஒதுக்கப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரங்கள் பிரிக்கப்பட்டன. மேலும் ரகசிய குறியீடு எண்களை கொண்டு சரிபார்க்கப்பட்டன. அதன்பின்னர் வாக்குப்பதிவு எந்திரங்கள் தனி அறையில் வைத்து பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டது.


Next Story