வேலைக்கு செல்ல கணவர் எதிர்ப்பு: இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை
வேலைக்கு செல்ல கணவர் எதிர்ப்பு தெரிவித்ததல் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
கிருஷ்ணகிரி:
பெத்ததாலப்பள்ளி காமராஜ் நகரை சேர்ந்தவர் ஹேமலதா (வயது 24). இவருக்கும் சூளகிரி அருகே உள்ள பெல்லட்டி பகுதியை சேர்ந்த முரளி (29) என்பவருக்கும் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஹேமலதா கிருஷ்ணகிரியில் கே. தியேட்டர் சாலையில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இதற்கு கணவர் எதிர்ப்பு தெரிவித்ததால் தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்தநிலையில் கடந்த 1-ந் தேதி ஹேமலதா தான் பணிபுரியும் நிறுவனத்தின் அருகில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். பிறகு அவர் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ஹேமலதா நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் திருமணம் ஆகி 1½ ஆண்டுகளில் இளம்பெண் இறந்துள்ளதால் இதுகுறித்து கிருஷ்ணகிரி துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயராகவன் விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story