வாலாஜாவில் மளிகைக்கடையில் குட்கா பறிமுதல்
மளிகைக்கடையில் குட்கா பறிமுதல்
வாலாஜா
ராணிப்பேட்டை மாவட்டத்தில் குட்கா மற்றும் கஞ்சாவை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டு ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன் உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் தலைமையில், போலீசார் நித்தியானந்தம், மணிகண்டன் ஆகியோரை கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு மாவட்டம் முழுவதும் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். கடைகளில் சோதனையும் நடத்தப்பட்டது.
அப்போது வாலாஜா நரோசிஜிராவ் தெருவில் ஒரு மளிகைக் கடையில் பதுக்கி வைத்திருந்த 27 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக ஜீவாராம் (வயது 21) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன் கூறுகையில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் குட்கா மற்றும் கஞ்சா விற்பனையில் யாரேனும் ஈடுபட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு, குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்படுவார்கள், என எச்சரிக்கை விடுத்தார்.
Related Tags :
Next Story