மேலும் 127 பேருக்கு கொரோனா
திருப்பூர் மாவட்டத்தில் நேற்று 127 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரே நாளில் கொரோனா பாதிப்பு திடீரென்று அதிகரித்துள்ளது பொது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்தில் நேற்று 127 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரே நாளில் கொரோனா பாதிப்பு திடீரென்று அதிகரித்துள்ளது பொது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
127 பேருக்கு கொரோனா
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தினசரி பாதிப்பு 30-க்கு கீழ் இருந்த நிலையில் பின்னர் அது 80-ஐ தொட்டது. நேற்று திடீரென பாதிப்பு அதிகரித்து திருப்பூர் மாவட்டத்தில் 127 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கொரோனா பரவல் தமிழகம் முழுவதும் அதிகரித்து வந்த நிலையில் திருப்பூரிலும் வேகம் எடுத்துள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் திருப்பூர் மற்றும் கோவையில் உள்ள அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 99 ஆயிரத்து 137 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 73 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 97 ஆயிரத்து 544 ஆக அதிகரித்துள்ளது.
மாவட்டம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 562 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கொரோனாவுக்கு பலி இல்லை. இதனால் கொரோனா பலி எண்ணிக்கை 1,028 ஆக உள்ளது.
100-ஐ தாண்டிய பாதிப்பு
சமீப காலமாக தினசரி 80 பேர் பாதிக்கப்பட்டதே அதிகபட்சமாக இருந்த நிலையில் ஒரே நாளில் 100 பேரை கடந்து பாதிப்பு சென்றுவிட்டது. இது பொதுமக்கள் மத்தியில் பெரிதும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வேகமாகப் பரவ தொடங்கி இருப்பதால் பொதுமக்கள் கண்டிப்பாக முக கவசம் அணியவும், சமூக இடைவெளியை முறையாக கடைபிடிக்கவும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி வருகிறது.
Related Tags :
Next Story