தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தினர் சாலையில் அரிசியை கொட்டி ஆர்ப்பாட்டம்
கொள்ளிடம் அருகே ரேஷன் கடைகளில் தரமான அரிசி வழங்கக்கோரி தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தினர் சாலையில் அரிசியை கொட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கொள்ளிடம்:
கொள்ளிடம் அருகே ரேஷன் கடைகளில் தரமான அரிசி வழங்கக்கோரி தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தினர் சாலையில் அரிசியை கொட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே எருக்கூர் கிராமத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நவீன அரிசி ஆலை இயங்கி வருகிறது. இந்த அரிசி ஆலையில் அரைக்கப்படும் அரிசி மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் இங்கு இருந்து ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்படும் அரிசி தரமற்று இருப்பதாக புகார் எழுந்துள்ளது. தொடர்ந்து தரமற்ற அரிசி வழங்கப்படுவதை கண்டித்தும், தரமான அரிசி வழங்க வலியுறுத்தியும் பல்வேறு அமைப்பினரும், பொதுமக்களும் அரிசியை சாலையில் கொட்டியும், பெண்கள் ஒப்பாரி வைத்தும், கோஷங்கள் எழுப்பி ஊர்வலமாக சென்று நவீன அரிசி ஆலை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோஷங்கள்
ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமை தாங்கினார்.
இதில், ஒன்றிய செயலாளர் சிவராமன், விவசாய சங்க மாவட்ட செயலாளர் வீரராஜ், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் கஜேந்திரன் மற்றும் நிர்வாகிகள் சுந்தரய்யா, வரதராஜன், ஜெய்சக்திவேல், பிரபாகரன், கலியமூர்த்தி, தேவகி, ஜீவமணி, பாஸ்கரன், மூவேந்தன் உள்பட 300-க்கும் மேற்பட்ட ஆண் மற்றும் பெண்கள் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.
Related Tags :
Next Story