கரூர் மாவட்டத்தில், வழிபாட்டுத்தலங்கள் மூடல்


கரூர்
x
கரூர்
தினத்தந்தி 8 Jan 2022 12:31 AM IST (Updated: 8 Jan 2022 12:31 AM IST)
t-max-icont-min-icon

கரூர் மாவட்டத்தில், வழிபாட்டுத்தலங்கள் மூடப்பட்டதால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

கரூர், 
வழிபாட்டுத்தலங்கள் மூடல்
தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனையொட்டி தமிழக அரசால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இரவு 10 மணி முதல் காலை 5 மணி இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. 
ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது
பக்தர்கள் ஏமாற்றம்
அந்தவகையில் நேற்று கரூரில் பிரசித்தி பெற்ற கல்யாண பசுபதீஸ்வரர் கோவில், கரூர் மாரியம்மன் கோவில், தாந்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோவில், வெண்ணைமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளிட்ட அனைத்து கோவில்களும் அடைக்கப்பட்டிருந்தன. 
ஆனாலும் கோவில்களில் சுவாமிகளுக்கு வழக்கமான பூஜைகள் நடை பெற்றன. இந்நிலையில் வெள்ளிக்கிழமையான நேற்று சாமி தரிசனம் செய்ய வந்திருந்த பக்தர்கள் கோவில் முன்பு பூக்களை வைத்தும், சூடம் ஏற்றியும் வழிபட்டனர். சாமி தரிசனம் செய்ய முடியாததால் பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
பள்ளி வாசல்களும் மூடல்
இதேபோல் மாவட்டத்தில் கிறிஸ்தவ தேவாலயங்கள், பள்ளி வாசல்களும் மூடப்பட்டிருந்தன. இதேபோல் இன்றும்( சனிக்கிழமை), நாளையும் (ஞாயிற்றுக்கிழமை ) வழிபாட்டுத்தலங்கள் மூடப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
நொய்யல்
நொய்யல் செல்லாண்டியம்மன், சேமங்கி மாரியம்மன் கோவில், அத்திப்பாளையம் பொன்னாச்சி அம்மன், குந்தாணி பாளையம் நத்தமேடு ஈஸ்வரன் கோவில், புன்னம் பகவதி அம்மன், அங்காள பரமேஸ்வரி அம்மன் உள்பட நொய்யல் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள அனைத்து கோவில்களிலும் அடைக்கப்பட்டிருந்தன. இதனால் கோவில்களுக்கு வந்த பக்தர்கள் ஏமாற்றத்துடன் சென்றனர்.

Next Story