திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் வாலிபர் தீக்குளிக்க முயற்சி


திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் வாலிபர் தீக்குளிக்க முயற்சி
x
தினத்தந்தி 8 Jan 2022 12:43 AM IST (Updated: 8 Jan 2022 12:43 AM IST)
t-max-icont-min-icon

கலெக்டர் அலுவலகத்தில் வாலிபர் தீக்குளிக்க முயற்சி

திருவண்ணாமலை

திருவண்ணாமலை சிவசக்தி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் விநாயகம் (வயது 33), ஏ.சி. மெக்கானிக். இவர் நேற்று அவரது 5 வயது மகனுடன் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அப்போது அவர் திடீரென மறைத்து வைத்திருந்த மண்எண்ணெயை எடுத்து உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். 

இதைக் கண்ட அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர் மீது தண்ணீர் ஊற்றினர். பின்னர் போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவருக்கும், அவரது மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வருவதாகவும், அதிகாரிகள் சமரசம் செய்து வைக்க வேண்டும் என்றும் கூறினார். இதையடுத்து போலீசார் அவருக்கு அறிவுரை வழங்கி சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story