ரெயிலில் கடத்த முயன்ற 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்


ரெயிலில் கடத்த முயன்ற 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
x
தினத்தந்தி 8 Jan 2022 12:45 AM IST (Updated: 8 Jan 2022 12:45 AM IST)
t-max-icont-min-icon

3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

வாணியம்பாடி

திருப்பத்தூர் மாவட்டத்திலிருந்து தொடர்ந்து ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களுக்கு ெரயில்கள் மூலம் ரேஷன் அரிசி கடத்துவதாக, கலெக்டர் அமர்குஷ்வாஹாவுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை சென்னை கோட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் உத்திரவின் பேரில், வேலூர் குடிமை பொருள் வழங்கல் குற்றபுலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சதீஷ் தலைமையில் சிறப்பு அதிரடி குழு வாணியம்பாடி, நாட்டறம்பள்ளி, பச்சூர், சோமநாயக்கன்பட்டி பகுதியிலும் மற்றும் ரெயில் நிலையங்கள் பகுதிகளில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். 

அப்போது கர்நாடகா மாநிலத்திற்கு கொண்டு செல்வதற்காக சோமநாயக்கன்பட்டி ெரயில் நிலையத்திற்கு கொண்டு வந்து மர்மநபர்கள் மூட்டைகளை இறக்கி கொண்டிருந்தனர். அவற்றை போலீசார் சோதனை செய்த போது அதில் ரேஷன் அரிசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கடத்தல்காரர்களை சுற்றி வளைத்து பிடிக்க முற்பட்டபோது தப்பி ஓடி விட்டனர். ஆனால் அங்கு அவர்கள் கொண்டு வந்திருந்த 3 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். இதேபோல் ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்துக்கு வந்த காக்கிநாடா-பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயிலில் சோதனையிட்டபோது 400 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.

Next Story