சோளிங்கர் அருகே ஏரியில் மூழ்கி 5 வயது சிறுவன் பலி
சோளிங்கர் அருகே ஏரியில் மூழ்கி 5 வயது சிறுவன் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சோளிங்கர்
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அருகே ஏரியில் மூழ்கி 5 வயது சிறுவன் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கால் தவறி விழுந்தான்
திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு பகுதியை சேர்ந்தவர் முனிசாமி. இவரது மனைவி அமுதா. இவர்களது மகள் கவி (வயது 7), மகன் ஜெகதீஷ் (5) ஆகியோர் புத்தாண்டை கொண்டாட ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரை அடுத்த தாலிகால் பகுதியில் உள்ள தாத்தா வீட்டிற்கு வந்துள்ளனா்.
இருவரும் நேற்று தாலிக்கால் ஏரிக்கரை அருகே விளையாடி கொண்டிருந்துள்ளனா். அப்போது எதிர்பாரதவிதமாக கால்தவறி ஜெகதீஷ் தண்ணீரில் விழுந்து விட்டான். இதை கண்ட அக்கா கவி உடனே ஜெகதீசை காப்பாற்ற இறங்கியுள்ளாள்.
தண்ணீரில் மூழ்கி பலி
ஆனால் இருவரும் தண்ணீரில் மூழ்கி விட்டனர். கவி கூச்சலிட்டதை தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து தண்ணீரில் தத்தளித்து கொண்டிருந்த கவியை மீட்டு கரைக்கு கொண்டு வந்துள்ளனா்.
இதனிடையே தம்பி ஜெகதீஷ் தண்ணீரில் மூழ்கியதை கவி கூறியுள்ளாள். இதை அறிந்த பொதுமக்கள் பதபதைப்புடன் ஓடி சென்று தண்ணீரில் மூழ்கி இருந்த ஜெகதீஷை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனா். ஆனால் அவன் இறந்து விட்டான்.
இதுகுறித்து தாத்தா கிஷ்டபிள்ளை கொண்டபாளையம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் அங்குவந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஜெகதீசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரனை நடத்தி வருகின்றனா்.
விடுமுறையை கழிக்க வந்த சிறுவனுக்கு இப்படி விபரீதம் ஏற்பட்டதை எண்ணி அப்பகுதி மக்கள் கண்களங்கி சோகத்தில் ஆழ்ந்துள்ளனா்.
Related Tags :
Next Story