சிவகாசி அருேக தனியார் மதுபான ‘கிளப்’பை சூறையாடிய கிராம மக்கள்


சிவகாசி அருேக தனியார் மதுபான ‘கிளப்’பை சூறையாடிய கிராம மக்கள்
x
தினத்தந்தி 8 Jan 2022 12:48 AM IST (Updated: 8 Jan 2022 12:48 AM IST)
t-max-icont-min-icon

சிவகாசி அருகே தனியார் மதுபான ‘கிளப்’பை கிராம மக்கள் அடித்து நொறுக்கி சூறையாடினர்.

தாயில்பட்டி,
சிவகாசி அருகே தனியார் மதுபான ‘கிளப்’பை கிராம மக்கள் அடித்து நொறுக்கி சூறையாடினர். 
தனியார் மதுபான ‘கிளப்’
சிவகாசி அருகே வெம்பக்கோட்டை ஒன்றியம் செவல்பட்டி ஊராட்சியை சேர்ந்த அண்ணபூரணியாபுரம் கிராமத்தில் தனியார்  மதுபான ‘கிளப்’ சமீபத்தில் திறக்கப்பட்டது. பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் அந்த கிளப் உள்ளதாகவும், அதனை மூட வலியுறுத்தியும்  அப்பகுதி மக்கள் அதற்கு அருகே 10 நாட்களாக காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த கடையை மூட வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்திலும் அவர்கள் மனு அளித்தனர்.  
அதன் பிறகும் அதிகாரிகள் எதுவும் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் நேற்று இரவில் மதுபான ‘கிளப்’க்குள் புகுந்து மதுபாட்டில்களை அடித்து நொறுக்கினர். அலமாறிகள் மீது செங்கற்களை வீசினர்.
கேமரா உடைப்பு 
பின்னர் அங்குள்ள நாற்காலிகள், கண்காணிப்பு கேமராக்களையும் உடைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த சாத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு நாகராஜன், வெம்பக்கோட்டை இன்ஸ்பெக்டர் சுந்தரபாண்டியன், வெம்பக்கோட்டை தாசில்தார் தன்ராஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். 
அப்போது  போராட்டத்தில் ஈடுபட்ட சிலர், அதிகாரிகள் நுழைய எதிர்ப்பு தெரிவித்தனர். அதிகாரிகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். 
போலீஸ் பாதுகாப்பு 
அத்துடன் அந்த கிளப்பை உடனடியாக மூட வேண்டும் என அவர்கள் அதிகாரிகளிடம் கூறினர். இதற்கிடையே போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மண்எண்ணெய் கேன் தீப்பெட்டியுடன் நின்று கொண்டு இருந்ததால் அந்த பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. 
இதையடுத்து போராட்டம் குறித்து கலெக்டருக்கு அதிகாரிகள் போன் மூலம் தகவல் தெரிவித்தனர். 
இதையடுத்து அதிகாரிகள் அந்த மதுபான கிளப்புக்கு சீல் வைத்தனர். பின்னர் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். 

Next Story