ஆண்டாள் கோவிலில் எண்ணெய் காப்பு நீராட்டு உற்சவம்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் எண்ணெய் காப்பு நீராட்டு உற்சவம் பக்தர்கள் இன்றி நடந்தது.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் எண்ணெய் காப்பு நீராட்டு உற்சவம் பக்தர்கள் இன்றி நடந்தது.
நீராட்டு உற்சவம்
ஒவ்வொரு ஆண்டும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் மார்கழி மாதம் நடைபெறும் எண்ணெய் காப்பு நீராட்டு உற்சவம் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த நிகழ்ச்சி வெகு சிறப்பாக 8 நாட்கள் நடைபெறும்.
இந்த எண்ணெய் காப்பு நீராட்டு உற்சவத்தை காண்பதற்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து எண்ணற்ற பேர் இங்கு வந்து தங்கி தரிசனம் செய்வது வழக்கம்.
இந்த உற்சவம் ஸ்ரீவில்லிபுத்தூர் திருமுக்குளத்தில் அருகே உள்ள ஆண்டாள் கோவிலுக்கு சொந்தமான எண்ணெய் காப்பு மண்டபத்தில் வைத்து நடைபெறும்.
பக்தர்களுக்கு அனுமதியில்லை
இந்நிலையில் கொரோனா தொற்று பரவல் காரணமாக தமிழக அரசு பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை அமல்படுத்தி உள்ளது.
இதன் காரணமாக நேற்று எண்ணெய் காப்பு உற்சவம் எண்ணெய்காப்பு மண்டபத்தில் நடைபெறாமல் ஆண்டாள் கோவில் வளாகத்தில் உள்ள பெரிய பெருமாள் சன்னதியில் ராப்பத்து மண்டபத்தில் வைத்து நடைபெற்றது.
இதில் பக்தர்களுக்கு அனுமதியில்லை. அர்ச்சகர்கள் மட்டும் பங்கேற்றனர்.
இதற்கான ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி இளங்கோவன் ஆகியோர் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story