குடும்பத்தினருடன் விஷம் குடித்த பெண் சாவு; 2 பேருக்கு சிகிச்சை


குடும்பத்தினருடன் விஷம் குடித்த பெண் சாவு; 2 பேருக்கு சிகிச்சை
x
தினத்தந்தி 8 Jan 2022 12:55 AM IST (Updated: 8 Jan 2022 12:55 AM IST)
t-max-icont-min-icon

சாத்தூரில் குடும்பத்தினருடன் விஷம் குடித்த பெண் உயிரிழந்தார். அவருடைய மகள் மற்றும் கணவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சாத்தூர், 
சாத்தூரில் குடும்பத்தினருடன் விஷம் குடித்த பெண் உயிரிழந்தார். அவருடைய மகள் மற்றும் கணவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 
பட்டாசு வியாபாரம் 
விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் பகுதியை சேர்ந்தவர் ஜான்சன் வசந்தகுமார் (வயது 54). இவருடைய மனைவி கரோலின் மேரி (50). இவர்களது மகள் சிவானி மரியா. இவர்கள் அனைவரும் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். 
ஜான்சன் வசந்தகுமார்  பட்டாசு வியாபாரம் செய்து வந்துள்ளார். வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டு கடன் பிரச்சினை இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் குடியிருந்து வரும் வீட்டிற்கு வாடகை செலுத்த முடியாமலும் அவதிப்பட்டு வந்ததாக தெரிகிறது. 
இந்தநிலையில் குடும்பத்துடன் சாத்தூர் வந்த அவர்கள், தனியார் விடுதி ஒன்றில் தங்கி இருந்தனர். 
பெண் சாவு 
சம்பவத்தன்று அவர்கள் 3 பேரும் விஷம் குடித்துள்ளனர். இதில்  கரோலின்மேரி உள்பட 3 பேரும் மயக்கம் அடைந்தனர். உடனே அவர்களை மீட்டு சாத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். 
இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி கரோலின் மேரி பரிதாபமாக உயிரிழந்தார். அவருடைய கணவர் மற்றும் மகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து சாத்தூர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Related Tags :
Next Story