கரும்பு நடும் பணியில் ஈடுபட்ட மாணவிகள்
ராஜபாளையத்தில் கரும்பு நடும் பணியில் மாணவிகள் ஈடுபட்டனர்.
ராஜபாளையம்,
ஸ்ரீவில்லிபுத்தூர் கலசலிங்கம் கல்லூரியில் இறுதி ஆண்டு பயிலும் இளநிலை வேளாண்மை மாணவிகள் கிராம தங்கல் திட்டத்தின் கீழ் ராஜபாளையம் பகுதியில் வேளாண் பயிற்சி பெற்று வருகின்றனர். ராஜபாளையம் அருகே சுந்தரராஜபுரம் கிராமத்தில், கோட்டைமலை சரிவில் உள்ள விவசாயி இருளியம்மாள் நடராஜனின் நிலத்தில் கரும்பு துண்டுகளை நடவு செய்தனர். இதில் மாணவிகள் கோகிலா, ஜோதிகா, கீர்த்தனா, தேஜஸ்வினி, அனிலா, சுவேதா, துர்கா தேவி, ஜீஸ்லின் ஜெனிகா ஆகியோர் விவசாய தொழிலாளர்களுடன் சேர்ந்து கரும்பு நடவு செய்தனர். மேலும் ராஜபாளையம் அருகே சேத்தூர் கிராமத்தில் சர்வதேச மண்வள தினத்தை முன்னிட்டு மண்வளம் மற்றும் மண் பரிசோதனை செய்யும் முறையை பற்றி விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும், மண்ணில் உள்ள சத்துக்கள் மற்றும் இயற்கை உரங்களை பயன்படுத்தும் முறைகளை கற்றுக்கொண்டனர். இதில் விவசாயிகள் மற்றும் விருதுநகர் மண்பரிசோதனை நிலைய அலுவலர் கணேசன், விருதுநகர் வேளாண் துணை இயக்குனர் விதை ஆய்வு விஜயா, ராஜபாளையம் வேளாண்மை உதவி இயக்குனர் சுப்பையா மற்றும் வேளான் அதிகாரி தனலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story