பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வை ஏற்படுத்த 800 பேருக்கு மஞ்சப்பை
பட்டுக்கோட்டையில் பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலும் ஒழிக்கும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்த 800 பேருக்கு உதவி கலெக்டர் பிரபாகர் மஞ்சப்பை வழங்கினார்.
பட்டுக்கோட்டை:
பட்டுக்கோட்டையில் பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலும் ஒழிக்கும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்த 800 பேருக்கு உதவி கலெக்டர் பிரபாகர் மஞ்சப்பை வழங்கினார்.
மஞ்சப்பை வழங்கும் நிகழ்ச்சி
பட்டுக்கோட்டை மணிக்கூண்டு அருகில் விக்கிரமராஜா தலைமையிலான வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் பிளாஸ்டிக் பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்த மஞ்சப்பை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நகர வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் என்.வெங்கடேசன் தலைமை தாங்கினார். வக்கீல் ஆர். ராமசாமி வரவேற்றார்.
உதவி கலெக்டர் வழங்கினார்
இதில் பட்டுக்கோட்டை உதவி கலெக்டர் பிரபாகர் கலந்து கொண்டு 800 பேருக்கு மஞ்சப்பை வழங்கி பேசினார்.
நிகழ்ச்சியில் சங்க செயலாளர் இமானுவேல்ராஜ், கவுரவ தலைவர் பழனியப்பன், ஒருங்கிணைப்பாளர்கள் மலையப்பன், சுப்பையாராஜா, நகராட்சி துப்புரவு அலுவலர் நெடுமாறன், துப்புரவு ஆய்வாளர்கள் ரவிச்சந்திரன், அறிவழகன், ஆரோக்கியசாமி மற்றும் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் சாகுல்அமீது நன்றி கூறினார்.
Related Tags :
Next Story