ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்
தொழிலாளர் நலவாரிய எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என உதவி ஆணையர் கூறினார்.
விருதுநகர்,
தொழிலாளர் நலவாரிய எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என உதவி ஆணையர் கூறினார்.
உதவித்தொகை
தமிழக அரசால் தொழிலாளர் நலத்துறையின் கீழ் தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகம் ஏற்படுத்தப்பட்டு தமிழ்நாடு கட்டுமானம் உள்ளிட்ட 18 அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியங்களில் கட்டுமானம், பட்டாசு, தீப்பெட்டி தொழில், தையல், சலவைப்பொருட்கள், மண்பாண்டம், விசைத்தறி, சமையல், தெரு வியாபாரம் உள்பட 113-க்கும் மேற்பட்ட தொழில்களை உள்ளடக்கிய அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியங்கள் மாவட்டந்தோறும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த வாரியங்களில் பதிவு பெற்ற கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் விபத்து, மரணம், இயற்கை மரணம், திருமணம், மகப்பேறு ஓய்வூதியம் மற்றும் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
ஆதார் எண்
தற்போது தொழிலாளர் நலவாரிய பதிவு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இணையதளத்தில் பதிவு புதுப்பித்தல் மற்றும் அப்டேஷன் செய்த தொழிலாளர்கள் தவிர இதுவரை ஆதார் எண் இணைக்கப்படாத தொழிலாளர்கள் தங்களின் தொலைபேசி எண் குறிப்பிட்டு தொழிலாளர்கள் ஆதார்அடையாள அட்டை நகலுடன் விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்பி வைக்குமாறு உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) காளிதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.
Related Tags :
Next Story