தற்காலிக விரிவுரையாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்
தற்காலிக விரிவுரையாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர்:
உள்ளிருப்பு போராட்டம்
பெரம்பலூர் அருகே குரும்பலூரில் இயங்கி வந்த, பெரம்பலூர் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கடந்த 2019-ம் ஆண்டு முதல் அரசு கல்லூரியாக மாற்றப்பட்டது. இந்த கல்லூரியில் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கீழ் தற்காலிகமாக பணிபுரியும் கவுரவ, மணிநேர விரிவுரையாளர்களும் மற்றும் அலுவலக பணியாளர்களும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அவர்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் நேற்று கல்லூரி வளாகத்தில் காலவரையற்ற உள்ளிருப்பு போராட்டத்தை தொடங்கினர்.
போராட்டத்தில் கலந்து கொண்ட தற்காலிக விரிவுரையாளர்கள், அலுவலக பணியாளர்கள் கடந்த ஆண்டு ஜூன், அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய 4 மாதங்களாக வழங்கப்படாமல் உள்ள ஊதியத்தையும், ரூ.20 ஆயிரமாக உயர்த்தப்பட்ட ஊதியத்தையும் நிலுவையின்றி வழங்க வேண்டும்.
இரவும் நீடித்தது
1.1.2020 முதல் 24 மாதங்களுக்கான நிலுவை தொகையை வழங்க வேண்டும். மணிநேர விரிவுரையாளர்கள் என்ற பெயரை கவுர விரிவுரையாளர்கள் என்று மாற்றி அரசாணை வழங்கி நிலுவை தொகையுடன ஊதியத்தை உயர்த்தி வழங்கிட வேண்டும். அனைத்து தற்காலிக பணியாளர்களுக்கும் பணி பாதுகாப்பினை வழங்கிட வேண்டும். 20.4.2020 முதல் பல்கலைக்கழக தினக்கூலி பணியாளர்களுக்கு உயர்த்தப்பட்ட ஊதியத்தினை போன்ற உறுப்பு கல்லூரிகளில் பணிபுரியும் தொகுப்பூதிய பணியாளர்களுக்கும் நிலுவை தொகையுடன் கூடிய ஊதிய உயர்வு வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் நிறைவேற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று என்பது உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை எழுப்பினர். காலை 10 மணி தொடங்கிய உள்ளிருப்பு போராட்டம் இரவிலும் நீடித்தது.
Related Tags :
Next Story