வீட்டின் பூட்டை உடைத்து 6 பவுன் நகை திருட்டு


வீட்டின் பூட்டை உடைத்து 6 பவுன் நகை திருட்டு
x
தினத்தந்தி 8 Jan 2022 2:08 AM IST (Updated: 8 Jan 2022 2:08 AM IST)
t-max-icont-min-icon

வீட்டின் பூட்டை உடைத்து 6 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.

வேப்பந்தட்டை:
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள காரியானூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஹனிபா. இவரது மனைவி மும்தாஜ்பேகம்(வயது 40). கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்ற அவர் நேற்று மாலை வீடு திரும்பினார். அப்போது வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த வளையல், சங்கிலி, தோடு உள்ளிட்ட 6 பவுன் நகைகள் திருட்டு போயிருந்தது தெரிய வந்தது. இது குறித்து அவர் அளித்த புகாரின்பேரில் கை.களத்தூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். நேற்று முன்தினம் இதே ஊரில் 2 வீடுகளில் திருட்டு சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story