ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 103 பேருக்கு கொரோனா; வேகமாக பரவுவதால் பொதுமக்கள் அச்சம்
ஈரோடு மாவட்டத்தில் நேற்று புதிதாக 103 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. வேகமாக வைரஸ் பரவுவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் நேற்று புதிதாக 103 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. வேகமாக வைரஸ் பரவுவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
103 பேருக்கு கொரோனா
ஈரோடு மாவட்டத்தில் கடந்த வாரம் கொரோனா தொற்று குறைந்து 22 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து கொரோனா பரவல் படிப்படியாக உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் 4 ஆயிரத்து 691 பேருக்கு பரிசோதனை செய்ததில் 47 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது.
இந்த நிலையில் நேற்று சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்ட பட்டியலின்படி மாவட்டத்தில் புதிதாக 103 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 8 ஆயிரத்து 84 ஆக உயர்ந்தது.
பொதுமக்கள் அச்சம்
மேலும் நேற்று பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 48 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
இதுவரை மாவட்டத்தில் 1 லட்சத்து 6 ஆயிரத்து 938 பேர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டுள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு 711 பேர் பலியாகி உள்ள நிலையில் தற்போது தொற்று உள்ள 435 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மாவட்டத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் பொதுமக்கள் மிகுந்த அச்சம் அடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story