கொடுமுடியில் முகக்கவசம் அணியாத 38 பேருக்கு ரூ.7,600 அபராதம்


கொடுமுடியில் முகக்கவசம் அணியாத 38 பேருக்கு ரூ.7,600 அபராதம்
x
தினத்தந்தி 8 Jan 2022 2:53 AM IST (Updated: 8 Jan 2022 2:53 AM IST)
t-max-icont-min-icon

கொடுமுடியில் முகக்கவசம் அணியாத 38 பேருக்கு ரூ.7,600 அபராதம் விதிக்கப்பட்டது.

கொடுமுடி
கொடுமுடி பேரூராட்சி செயல் அலுவலர் விஜயநாத் தலைமையில் புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், கொடுமுடி-நொய்யல் சாலை  உள்ளிட்ட இடங்களில் முகக்கவசம் அணியாமல் வந்த 12 பேருக்கு  தலா ரூ.200 வீதம் ரூ.2,400 அபராதம் விதிக்கப்பட்டது.
இதேபோல் கொடுமுடி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையில் போலீசார் ரோந்து சென்றபோது முகக்கவசம் அணியாத 26 பேரிடம் ரூ.5,200 அபராதமாக வசூலிக்கப்பட்டது. மொத்தம் 38 பேரிடம் இருந்து 7,600 ரூபாய் அபராதமாக வசூல் செய்யப்பட்டது.

Next Story