கோவில் உண்டியலில் திருடியவர் கைது


கோவில் உண்டியலில் திருடியவர் கைது
x
தினத்தந்தி 8 Jan 2022 3:34 AM IST (Updated: 8 Jan 2022 3:34 AM IST)
t-max-icont-min-icon

கோவில் உண்டியலில் திருடியவரை கைதுசெய்தனர்

நெல்லை:
பாளையங்கோட்டை அருகே ரெட்டியார்பட்டி பகுதியில் முப்பிடாதி அம்மன் கோவில் உள்ளது. அங்கு நேற்று ஒரு நபர் சுவிங்கத்தை ஒரு குச்சியில் வைத்து அதனை உண்டியல் உள்ளே விட்டு நூதன முறையில் நைசாக பணத்தை திருடிக் கொண்டிருந்தார். இதனை பார்த்த அந்த பகுதி பொதுமக்கள் அந்த நபரை கையும், களவுமாக பிடித்து பெருமாள்புரம் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அந்த நபரிடம் விசாரணை நடத்தினர். இதில் அவர் அதே பகுதியை சேர்ந்த பால்ராஜ் (வயது 40) என்பதும், அவர் கோவில் உண்டியலில் இருந்து பணத்தை திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து பால்ராஜை கைது செய்து, அவரிடம் இருந்து ரூ.860-ஐ பறிமுதல் செய்தனர்.

Next Story