நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக தென்காசியில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் தேர்வு


நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக தென்காசியில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் தேர்வு
x
தினத்தந்தி 8 Jan 2022 4:09 AM IST (Updated: 8 Jan 2022 4:09 AM IST)
t-max-icont-min-icon

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் தேர்வு நடந்தது


தென்காசி:
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு தென்காசி மாவட்டத்தில் உள்ள 6 நகராட்சிகள், 17 பேரூராட்சிகளில் வாக்குப்பதிவு நடத்துவதற்கான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை இணையதளம் மூலம் சுழற்சி முறையில் தேர்வு செய்யும் நிகழ்ச்சி, தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.
மாவட்ட கலெக்டர் கோபால சுந்தரராஜ் தலைமை தாங்கி, மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை இணையதளம் மூலம் சுழற்சி முறையில் தேர்வு செய்தார். இதில் அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Next Story