வீட்டின் பூட்டை உடைத்து 19 பவுன் நகை திருட்டு
திருவொற்றியூரில் வீட்டின் பூட்டை உடைத்து 19 பவுன் நகை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
திருவொற்றியூர்,
திருவொற்றியூர் ராஜாஜி நகர் சாஸ்திரி தெருவில் வசித்து வருபவர் பாபு (வயது 50). இவருடைய மனைவி கன்னியம்மாள். இவர்களுடைய மகன் விஜய். இவர்கள் 3 பேரும் தனியார் தொழிற்சாலையில் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வருகின்றனர்.
நேற்று காலை வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்று விட்டனர். மாலையில் வேலை முடிந்து வீடு திரும்பியபோது, இவர்களது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 19 பவுன் தங்க நகை மற்றும் ரூ.2,500 ஆகியவற்றை திருடிச்சென்று இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து சாத்தாங்காடு குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
Related Tags :
Next Story