உதவித்தொகை பெற வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்கள் விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருவள்ளூர்,
திருவள்ளூர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழி காட்டும் மையத்தில் பதிவுசெய்து காத்திருக்கும் வேலைவாய்ப்பற்ற பதிவுதாரர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த உதவித்தொகை பெற விருப்பம் உள்ளவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையத்தில் நேரிலோ அல்லது வேலைவாய்ப்பு இணையதள முகவரியான https://tnvelaivaaippu.gov.in அல்லது https://employment exchange.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அடுத்த மாதம் 28-ந்தேதிக்குள் வேலைவாய்ப்பு அடையாள அட்டை, ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கணக்கு புத்தகம் மற்றும் அனைத்து அசல் கல்விச்சான்றிதழ்களுடன் சமர்ப்பித்து பயன்பெறலாம்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருந்தது.
Related Tags :
Next Story