கொடைரோடு அருகே பாதயாத்திரை பக்தர்களுக்கு ஒளிரும் குச்சிகள் போலீஸ் சூப்பிரண்டு வழங்கினார்
கொடைரோடு அருகே பாதயாத்திரை பக்தர்களுக்கு ஒளிரும் குச்சிகளை போலீஸ் சூப்பிரண்டு வழங்கினார்.
கொடைரோடு:
கொடைரோடு அருகே உள்ள பள்ளபட்டி பிரிவில், போலீஸ் சோதனைச்சாவடி செயல்பட்டு வருகிறது. இந்த சோதனைச்சாவடியை, போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். மேலும் தென்மாவட்டங்களில் இருந்து பழனி முருகன் கோவிலுக்கு பாதயாத்திரையாக வந்த பக்தர்களுக்கு அவர் ஒளிரும் குச்சிகளை வழங்கினார்.
இரவு நேரத்தில் ஓய்வு எடுத்து பகலில் பாதயாத்திரை செல்ல வேண்டும் என்றும், சாலையில் ஓரமாக நடந்து செல்ல வேண்டும் என்றும் போலீஸ் சூப்பிரண்டு அறிவுறுத்தினார். இதைத்தவிர பாதயாத்திரை பக்தர்களுக்கு கொரோனா தடுப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார். அப்போது நிலக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு சுகுமார், அம்மையநாயக்கனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முக லட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் விஜயபாண்டியன் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Tags :
Next Story