இன்று முழு ஊரடங்கு எதிரொலி கொடைக்கானலில் வெறிச்சோடிய சுற்றுலா இடங்கள்
இன்று முழு ஊரடங்கு எதிரொலியாக கொடைக்கானலில் சுற்றுலா இடங்கள் வெறிச்சோடின.
கொடைக்கானல்:
கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில், தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது. மேலும் இன்று முதல் ஞாயிற்றுக்கிழமைதோறும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது.
இதன் எதிரொலியாக, கொடைக்கானலுக்கு வருகிற சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நேற்று வெகுவாக குறைந்தது. காலை முதல் பிற்பகல் வரை பல்வேறு மாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வருகை தந்தனர்.
அதன்பிறகு மாலையில் சுற்றுலா பயணிகளின் வருகை படிப்படியாக குறைந்து விட்டது. இதனால் கொடைக்கானலில் உள்ள அனைத்து சுற்றுலா இடங்களும் வெறிச்சோடின.
பிரையண்ட் பூங்கா
இதேபோல் நட்சத்திர ஏரி, பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா, செட்டியார் பூங்கா ஆகியவை சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடின. இருப்பினும் வெளிமாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள், பல்வேறு இடங்களில் உள்ள தங்கும் விடுதிகளில் தங்கி உள்ளனர்.
இவர்கள் இன்று காலை முதல் வெளியே நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது. அனைவரும் அறைகளிலேயே தங்கி இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அவசியம் இன்றி வெளியே சுற்றித்திரிவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதற்கிடையே போலீஸ் துணை சூப்பிரண்டு சீனிவாசன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் முக்கிய சுற்றுலா இடங்களில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
Related Tags :
Next Story