திருமண ஆசைகாட்டி 9-ம் வகுப்பு மாணவியை கடத்திய தொழிலாளி கைது


திருமண ஆசைகாட்டி 9-ம் வகுப்பு மாணவியை கடத்திய தொழிலாளி கைது
x
தினத்தந்தி 8 Jan 2022 6:46 PM IST (Updated: 8 Jan 2022 6:46 PM IST)
t-max-icont-min-icon

திருமண ஆசைகாட்டி 9-ம் வகுப்பு மாணவியை கடத்திய தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

கோபால்பட்டி:
சாணார்பட்டி அருகே உள்ள கோபால்பட்டியை சேர்ந்தவர் அஜய்குமார் (வயது 21). கூலித்தொழிலாளி. இவர், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு 15 வயதான 9-ம் வகுப்பு மாணவியை திருமண ஆசை காட்டி கடத்தி சென்று விட்டார். இது தொடர்பாக மாணவியின் தந்தை, சாணார்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் பல்வேறு இடங்களில் அஜய்குமார் மற்றும் மாணவியை தேடி வந்தனர். இந்தநிலையில் திண்டுக்கல்லில் அஜய்குமார், அந்த மாணவியுடன் சுற்றித்திரிந்தபோது போலீசார் மடக்கி பிடித்தனர். அஜய்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் பிடிபட்ட மாணவி அரசு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

Next Story