‘தினத்தந்தி’ புகார் பெட்டி


‘தினத்தந்தி’ புகார் பெட்டி
x
தினத்தந்தி 8 Jan 2022 7:15 PM IST (Updated: 8 Jan 2022 7:15 PM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

புகாருக்கு உடனடி தீர்வு
நெல்லையை அடுத்த பேட்டை திருத்து பகுதியில் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாக வெளியேறுவதாக ராஜூ என்பவர் ‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு அனுப்பிய பதிவு பிரசுரமானது. இதையடுத்து அங்கு புதிய குடிநீர் குழாய் அமைக்கப்பட்டது. கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த ‘தினத்தந்தி’க்கும், நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.

அடிப்படை வசதிகள் தேவை
நெல்லையை அடுத்த முன்னீர்பள்ளம் ஆரைக்குளம் காமராஜர் நகரில் பல ஆண்டுகளாக தெருவிளக்குகள் அமைக்கப்படவில்லை. அங்குள்ள தெருவிலும் பாறைகளாக குண்டும் குழியுமாக உள்ளது. எனவே அங்கு தெருவிளக்கு, சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும்.
- சேர்மத்துரை, காமராஜர் நகர்.

தெருவில் தேங்கும் கழிவுநீர்
பாளையங்கோட்டை யூனியன் முத்தூர் பஞ்சாயத்து காமராஜநகரில் தெருவில் கழிவுநீர் தேங்குகிறது. இதனால் சுகாதாரக்கேடு ஏற்படுவதுடன் சாலையும் குண்டும் குழியுமாக உள்ளது. எனவே, அங்கு வாறுகால், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்.
- முத்துபாண்டி, சிவந்திபட்டி.

பஸ் வசதி தேவை
மூலைக்கரைப்பட்டி அருகே கூந்தங்குளம் பறவைகள் சரணாலயத்துக்கு செல்வதற்கு போதிய பஸ் வசதி இல்லை. எனவே, மூலைக்கரைப்பட்டியில் இருந்து கடம்பன்குளம், கூந்தன்குளம் வழியாக திசையன்விளைக்கு கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும்.
-மணிகண்டன், கடம்பன்குளம்.

புகார் பெட்டி செய்தி எதிரொலி; குடிநீர் குழாய் உடைப்பு சீரமைப்பு

தென்காசி மாவட்டம் கடையம் அருகே முதலியார்பட்டி காந்தி நகரில் சாலையோரம் பதிக்கப்பட்ட குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகுவதாக திருக்குமரன் என்பவர் அனுப்பிய பதிவு ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் பிரசுரமானது. இதன் எதிரொலியாக உடனே குடிநீர் குழாய் உடைப்பை சீரமைத்தனர். கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த ‘தினத்தந்தி’க்கும், நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும் பாராட்டும் தெரிவித்துள்ளார்.

தடுப்புச்சுவர் இல்லாத கிணறு
கடையநல்லூர் 1-வது வார்டு குமந்தாபுரம் பஸ் நிலைய வடக்கு தெருவில் பயன்பாடற்ற தரைமட்ட பொது கிணற்றில் சிலர் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இதனால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. மேலும் யாரேனும் கிணற்றுக்குள் தவறி விழுந்து விடும் அபாயமும் உள்ளது. எனவே, ஆபத்தான கிணற்றைச் சுற்றிலும் தடுப்பு சுவர் அமைத்து, இரும்பு கம்பியால் மூட வேண்டும்.
- சீதாராமன், குமந்தாபுரம்.

நூலகம் புதுப்பிக்கப்படுமா?
சுரண்டை அரசு கிளை நூலகத்தின் மேற்கூரையில் மழைநீர் தேங்குவதால், தண்ணீர் கசிந்து சுவரின் வழியாக உள்ளே ஒழுகுகிறது. இதனால் வாசகர்கள் அவதிப்படுவதுடன் புத்தகங்களும் சேதமடையும் நிலை உள்ளது. எனவே, நூலகத்தின் மேற்கூரையில் மழைநீர் தேங்காமல் வழிந்தோடும் வகையில் முறையாக சீரமைத்து கட்டிடத்தை புதுப்பிக்க வேண்டும்.
- பிரசாத், சுரண்டை.

மயானத்துக்கு பாதை வசதி
கடையநல்லூர் தாலுகா அரியநாயகிபுரம் பஞ்சாயத்து பெரியசாமிபுரத்தில் மயானத்துக்கு செல்வதற்கு பாதை வசதி இல்லை. எனவே, அங்கு பாதை வசதி, மின்விளக்கு, தண்ணீர் வசதி போன்றவற்றை நிறைவேற்ற வேண்டும்.
- மதுசூதனன், பெரியசாமிபுரம்.

ஆபத்தான வாறுகால்
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பழைய தாலுகா அலுவலகம் அருகில் நான்குரோடு சந்திப்பு பகுதியில் சாலையோர வாறுகாலின் மீது மரக்கட்டைகளால் தடுப்பு அமைத்து, மண்மூட்டைகளை அடுக்கி வைத்துள்ளனர். ஸ்ரீவைகுண்டம் பஸ் நிலையத்துக்கு செல்லும் அனைத்து பஸ்களும் இந்த வழியாகத்தான் செல்கின்றன. சில வாகனங்கள் வாறுகாலுக்குள் தவறி விழுந்து விபத்தில் சிக்கியுள்ளன. எனவே, ஆபத்தான வாறுகாலின் மீது கான்கிரீட் மூடி அமைக்க வேண்டும்.
- சித்திரைவேல், ஸ்ரீவைகுண்டம்.

பயணிகள் நிழற்கூடம் புதிதாக கட்டப்படுமா?
உடன்குடி தேரியூரில் உள்ள பயணிகள் நிழற்கூடத்தின் கான்கிரீட் சிமெண்டு பூச்சுகள் அடிக்கடி பெயர்ந்து விழுந்து சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால் பயணிகள் நிழற்கூடத்துக்குள் செல்லாமல் வெளியில் நின்றே பஸ் ஏறி செல்கின்றனர். எனவே, ஆபத்தான கட்டிடத்தை அகற்றி விட்டு புதிய நிழற்கூடம் கட்ட வேண்டும்.
- சரவணன், உடன்குடி.

Next Story