ஒப்பந்த ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
ஒப்பந்த ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
ஊட்டி
ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், ஆள்குறைப்பு செய்யக்கூடாது என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நீலகிரி மாவட்ட நகராட்சி மற்றும் உள்ளாட்சி துறை ஊழியர் சங்கம் சார்பில் ஊட்டி ஏ.டி.சி. திடலில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு சங்க தலைவர் பழனி தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் ரமேஷ் முன்னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் அரசாணைப்படி தூய்மை பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும். அவுட்சோர்சிங் உத்தரவை திரும்ப பெற வேண்டும். ஊட்டி நகராட்சி பணியாளர்களுக்கு கூடை, துடைப்பம், மண்வெட்டி, கையுறை போன்ற பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும். கடந்த 2006-ம் ஆண்டுக்கு பிறகு நிரந்தரம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு பிடித்தம் செய்த வருங்கால வைப்பு நிதி எந்த நிலையில் உள்ளது என்பதை தெரிவிக்க வேண்டும். இறந்துபோன ஊழியர்களின் பணபலன்களை அவர்களது குடும்பங்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பி வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story