உயிரிழந்த ராணுவ அதிகாரிகளுக்கு அஞ்சலி


உயிரிழந்த ராணுவ அதிகாரிகளுக்கு அஞ்சலி
x
தினத்தந்தி 8 Jan 2022 8:02 PM IST (Updated: 8 Jan 2022 8:02 PM IST)
t-max-icont-min-icon

உயிரிழந்த ராணுவ அதிகாரிகளுக்கு அஞ்சலி

ஊட்டி

குன்னூர் அருகே கடந்த மாதம் 8-ந் தேதி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 14 பேருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி, ஊட்டி காந்தல் முக்கோணம் விளையாட்டு மைதானத்தில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் தமிழ்நாடு தேசிய மாணவர் படை(அணி-31) கர்னல் சீனிவாஸ் கலந்துகொண்டு அணையா தீபத்தை ஏற்றி வைத்து விபத்தில் உயிரிழந்த ராணுவ அதிகாரிகளுக்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் பேசும்போது, எதிர்பாராத விபத்தில் ராணுவ அதிகாரிகள் உயிரிழந்தனர். 

அவர்கள் நாட்டிற்காக பங்காற்றி உள்ளனர். தேசிய மாணவர் படை மாணவ-மாணவிகள் கொரோனா காலத்தில் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் 30 அடி உயர மலர் வளையம் வைக்கப்பட்டு இருந்தது. ஊட்டி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) சசிகுமார், முன்னாள் ராணுவ வீரர்கள் நலச்சங்க தலைவர் சீனிவாசன் மற்றும் என்.சி.சி. மாணவர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Next Story