குளத்து தண்ணீரில் மயங்கிய நிலையில் கிடந்தவர், 8 நாட்களுக்கு பிறகு மீட்பு


குளத்து தண்ணீரில் மயங்கிய நிலையில் கிடந்தவர், 8 நாட்களுக்கு பிறகு மீட்பு
x
தினத்தந்தி 8 Jan 2022 8:26 PM IST (Updated: 8 Jan 2022 8:26 PM IST)
t-max-icont-min-icon

குளத்து தண்ணீரில் மயங்கிய நிலையில் கிடந்தவர், 8 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டார்.


சின்னாளப்பட்டி:
சின்னாளப்பட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் சரவணன் (வயது 42). கடந்த 1-ந்தேதி இவர், அங்குள்ள அய்யப்பன்ேகாவிலுக்கு சென்று வருவதாக கூறி வெளியே சென்றார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து சின்னாளப்பட்டி போலீஸ் நிலையத்தில், அவருடைய அண்ணன் குணராஜ் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணனை தேடி வந்தனர்.
இந்தநிலையில் நேற்று மாலை சின்னாளப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே உள்ள குளத்துக்கு, அப்பகுதியை சேர்ந்த சுமை தூக்கும் தொழிலாளி சண்முகம் சென்றார். அந்த குளத்துக்குள் சீமை கருவேல மரங்களுக்கு இடையே புதருக்குள் தலை மட்டும் தெரிந்த நிலையில் ஒருவர் மயங்கி கிடந்தார். இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த சண்முகம், இது தொடர்பாக சின்னாளப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
இதனையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று புதரை அகற்றி, அந்த நபரை மீட்டனர். அவர், காணாமல் போன சரவணன் என்று தெரியவந்தது. கடந்த 8 நாட்களாக தண்ணீரில் இருந்ததால் அவருடைய உடல் முழுவதும் குளத்தில் வளரக்கூடிய பூஞ்சை முளைத்திருந்தது. மேலும் சாப்பிடாமல் இருந்ததால் உடல் சோர்வாக காணப்பட்டார். மேலும் தண்ணீரில் மூழ்காமல் உட்கார்ந்தவாரே மயங்கிய நிலையில் இருந்தார். இதற்கிடையே மீட்கப்பட்ட சரவணன், சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.



Next Story