சாத்தான்குளத்தில் ரூ.1 லட்சம் புகையிலை பாக்கெட்டுகள் அழிப்பு


சாத்தான்குளத்தில் ரூ.1 லட்சம் புகையிலை பாக்கெட்டுகள் அழிப்பு
x
தினத்தந்தி 8 Jan 2022 8:32 PM IST (Updated: 8 Jan 2022 8:32 PM IST)
t-max-icont-min-icon

சாத்தான்குளத்தில் ரூ.1 லட்சம் புகையிலை பாக்கெட்டுகள் அழிக்கப்பட்டது.

சாத்தான்குளம்:
சாத்தான்குளம், தட்டார்மடம், மெஞ்ஞானபுரம், நாசரேத் ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகள் சாத்தான்குளம் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது. ஒருங்கிணைந்த நீதிபதி ரமேஷ் விசாரணை நடத்தி, புகையிலை விற்பனை செய்த நபர்களுக்கு அபராதம் விதித்தார். நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்ட ரூ.1 லட்சம் மதிப்புள்ள புகையிலை பாக்கெட்டுகள் நீதிபதி ரமேஷ் முன்னிலையில் நீதிமன்றம் முன்பு எரித்து அழிக்கப்பட்டது.

Next Story