புகாா் பெட்டி


புகாா் பெட்டி
x
தினத்தந்தி 8 Jan 2022 9:22 PM IST (Updated: 8 Jan 2022 9:22 PM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகாா் பெட்டி

தெரு விளக்குகள் ஒளிருமா?

சிவகிரி கடை வீதியில் தியாகி தீரன் சின்னமலை சிலை உள்ளது. இந்த சிலையின் அருகே ரோட்டின் இருபுறமும் 2 மின்கம்பங்கள் உள்ளன. ஆனால் கடந்த சில நாட்களாக கம்பங்களில் இருக்கும் மின்விளக்குகள் ஒளிர்வதில்லை. இதனால் அந்த பகுதியில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. பெண்கள், முதியவர்கள் நடமாட முடியாமல் அச்சப்படுகிறார்கள். எனவே தெருவிளக்குகள் ஒளிர பேரூராட்சி அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.

குமார், சிவகிரி.

தூர்வாரப்படாத சாக்கடை

  ஈரோடு கருங்கல்பாளையம் ஜானகியம்மாள் லேஅவுட் பகுதியில் பல மாதங்களாக சாக்கடை தூா்வாரப்படாமல் கிடக்கிறது. இதனால் கழிவுநீர் தேங்கி கடுமையான துர்நாற்றம் வீசுகிறது. பல்வேறு தொற்றுநோய்கள் பரவும் இக்காலத்தில் சாக்கடை தூர்வாரப்படாமல் இருப்பது மேலும் நோய்களை வரவழைக்கும். எனவே ஜானகியம்மாள் லேஅவுட் பகுதியில் தேங்கி கிடக்கும் சாக்கடையை உடனே தூர்வார வேண்டும்.
  பொதுமக்கள், கருங்கல்பாளையம்.
பழுதடைந்த ரோடு(படம்)

  ஈரோடு கிருஷ்ணம்பாளையம் காலனி (13-வது வார்டு) நகராட்சி பள்ளி அருகில் மெயின் ரோடு மிகவும் மோசமாக பழுதடைந்து உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் தடுமாறுகிறார்கள். இரவு நேரத்தில் வருபவர்கள் கீழே விழுந்து விடுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கிருஷ்ணம்பாளையத்தில் பழுதடைந்த ரோட்டை விரைந்து சரிசெய்ய வேண்டும்.
  சதீஸ்கமல், ஈரோடு.
வேகத்தடைகள் அமைக்க வேண்டும்

  பவானி தாலுகா ஆண்டிகுளம் ஊராட்சிக்கு உள்பட்டது பழைய காடையம்பட்டி. இங்குள்ள ரேஷன் கடை அருகே, செங்காட்டையும் அந்தியூர் மெயின் ரோட்டையும் இணைக்கிற சாலை செல்கிறது. இந்த ரோடு சற்று குறுகலானது. இதனால் இந்த ரோட்டில் வேகமாக செல்லும் வாகன ஓட்டிகளால் அடிக்கடி சிறு அளவில் விபத்து ஏற்படுகிறது. பெரிய அளவில் விபத்து ஏற்படும் முன்னர், பழைய காடையம்பட்டி ரேஷன் கடை அருகே செல்லும் செங்காடு-அந்தியூர் மெயின் ரோடு இணைப்புச் சாலையில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள், 2 வேகத்தடைகள் அமைத்து பெரும் விபத்தினைத் தடுக்க முன் வருவார்களா?
  பொதுமக்கள், பழைய காடையம்பட்டி.
  
ரோடு சீரமைக்கப்படுமா?

  சென்னிமலை மேற்கு ராஜவீதியில் தெற்கு ராஜவீதி இணையும் பகுதியில் தார்சாலை செல்கிறது. இதன் வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலை மிக மோசமாக பழுதடைந்த நிலையில் காணப்படுகிறது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் கீழே விழுந்து படுகாயம் அடைகின்றனர். மலைக்கோவிலுக்கும் பக்தர்கள் இந்த வழியாக தான் செல்கிறார்கள். உடனே இந்த ரோட்டை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  துரையரசன், பொறையன்காடு, சென்னிமலை.


Next Story