தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
கயத்தாறில் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
கயத்தாறு:
கயத்தாறு சின்ன பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த செல்வ பாக்கியம் மகன் சகாயராஜ் (வயது 35). விவசாயியான இவர் கான்கிரீட் கலவை தயார் செய்யும் கூலி தொழிலாளியாகவும் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் அவர் வீட்டிற்கு பணம் கொடுக்காமல் அடிக்கடி மது குடித்துவிட்டு வருவதை வாடிக்கையாக கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதை அவரது மனைவி அந்தோணி செல்வம் (32) கண்டித்து வந்தார். நேற்று முன்தினமும் மது குடித்து விட்டு வந்த சகாயராஜை மனைவி கண்டித்தார்.
இதில் மனமுடைந்து காணப்பட்ட சகாயராஜ் வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) குடித்து விட்டு தோட்டத்தில் படுத்துக் கொண்டார். அங்கு மயங்கிய நிலையில் கிடந்த அவரை குடும்பத்தினரும், அக்கம்பக்கத்தினரும் மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த கயத்தாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து, சப்-இன்ஸ்பெக்டர் ஆண்டோனி ஆகியோர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த சகாயராஜூக்கு மனைவியும், அந்தோணி சந்தன சந்தோஷ் (15), ஜான்சன் ஆரோக்கியராஜ் (11) ஆகிய 2 மகன்களும், மிக்கேல் சந்தியா (13) என்ற மகளும் உள்ளனர்.
Related Tags :
Next Story