புகையிலை பொருட்கள், மது விற்ற 18 பேர் கைது
தூத்துக்குடி மாவட்டத்தில் புகையிலை பொருட்கள், மது விற்ற 18 பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின்பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். இதில் புகையிலைப் பொருட்கள் மற்றும் மதுபாட்டில்கள் விற்பனை செய்ததாக தூத்துக்குடி நகரம், திருச்செந்தூர், விளாத்திகுளம் ஆகிய உட்கோட்டத்தில் தலா ஒருவரும், ஸ்ரீவைகுண்டம் உட்கோட்டத்தில் 2 பேரும், கோவில்பட்டி உட்கோட்டத்தில் 6 பேரும், சாத்தான்குளம் உட்கோட்டத்தில் 3 பேரும், மதுவிலக்கு போலீசாரால் 4 பேரும் என மொத்தம் 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 46 புகையிலை பாக்கெட்டுகளும், 85 மது பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து சம்பந்தப்பட்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story