தச்சு தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
தேனி அருகே தச்சு தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
தேனி:
தேனி அருகே மஞ்சுநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் ரவி (வயது 52). தச்சு தொழிலாளி. இவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு வந்தது. இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் அவர் சிகிச்சை பெற்றார். ஆனாலும் வயிற்று வலி குணமாகவில்லை. இதனால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட ரவி சம்பவத்தன்று விஷம் குடித்தார்.
இதில் மயங்கி விழுந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் உயிரிழந்தார். இதுகுறித்து பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story