கல்வராயன்மலையில் பாறை மீது கார் மோதி சிறுவன் பலி சுற்றுலா வந்து ஊருக்கு திரும்பிய போது பரிதாபம்

கல்வராயன்மலையில் பாறை மீது கார் மோதி சிறுவன் பலி சுற்றுலா வந்து ஊருக்கு திரும்பிய போது பரிதாபம்
x

கல்வராயன்மலையில் பாறை மீது கார் மோதி சிறுவன் பலி சுற்றுலா வந்து ஊருக்கு திரும்பிய போது பரிதாபம்

கச்சிராயப்பாளையம்

சங்கராபுரம் அருகே பூட்டை ரோடு பகுதியைச் சேர்ந்தவர் பீட்டர் பிரான்சிஸ். இவரும் இவரது நண்பர் ஜார்ஜ் ஆகியோர் தனித்தனி காரில் குடும்பத்துடன் கல்வராயன்மலைக்கு சுற்றுலா வந்தனர். இங்கு பல்வேறு இடங்களை சுற்றி பார்த்த அவர்கள் மாலையில் அங்கிருந்து சொந்த ஊருக்கு புறப்பட்டனர். 
அப்போது பீட்டர் பிரான்சின் மகன் ஜெய்சந்தோஷ்(வயது 11) ஜார்ஜின் காரில் ஏறினான். பெரியார் நீர்வீழ்ச்சியின் அருகே வந்தபோது ஜார்ஜ் ஓட்டி வந்த கார் திடீரென நிலைதடுமாறி சாலையோரம் உள்ள பாறை மீது மோதி நின்றது. 

 இதில் படுகாயம் அடைந்த ஜெய் சந்தோஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தான். அவனது உடலை பார்த்து பெற்றோர் மற்றும் நண்பர்கள் கதறி அழுதது கல்நெஞ்சையும் கரையவைப்பதாக இருந்தது. 
இந்த விபத்து குறித்து கரியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கல்வராயன்மலைக்கு சுற்றுலா வந்து திரும்பும் வழியில் பாறையின் மீது கார் மோதி 11 வயது சிறுவன் பலியான சம்பவம் பூட்டை  ரோடு பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story