ரூ.2½ லட்சம் மோசடி செய்த கிராம நிர்வாக உதவியாளர் மீது வழக்கு


ரூ.2½ லட்சம் மோசடி செய்த கிராம நிர்வாக உதவியாளர் மீது வழக்கு
x
தினத்தந்தி 8 Jan 2022 5:47 PM GMT (Updated: 8 Jan 2022 5:47 PM GMT)

அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ.2½ லட்சம் மோசடி செய்த கிராம நிர்வாக உதவியாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

அரிமளம், 
புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் ஒன்றியம் ராயவரம் அருகே உள்ள ஆலங்குடி பகுதியை சேர்ந்தவர் கோமதி (வயது 24). இவரிடம் தலயாத்திரை கிராம நிர்வாக உதவியாளராக பணியாற்றி வரும் வனிதா என்பவர் ரூ.3 லட்சம் கொடுத்தால் அரசு வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளார். இதனை உண்மை என்று நம்பிய அவர் வனிதாவிடம் ரூ.2 லட்சத்து 60 ஆயிரத்தை கொடுத்து உள்ளார். ஆனால் அவர் கூறியபடி வேலை வாங்கி தராததால் அதிர்ச்சி அடைந்த கோமதி அரிமளம் போலீசில் புகார் அளித்தார். இதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் கிராம நிர்வாக உதவியாளரான வனிதா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story