நீதிபதி உள்பட 9 பேருக்கு கொரோனா


நீதிபதி உள்பட 9 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 8 Jan 2022 11:18 PM IST (Updated: 8 Jan 2022 11:18 PM IST)
t-max-icont-min-icon

மதுரை ஐகோர்ட்டில் நீதிபதி உள்பட 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

மதுரை,
மதுரை ஐகோர்ட்டில் கொரோனா காரணமாக வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரணை நடந்து வருகிறது.  இந்தநிலையில் கடந்த 3-ந்தேதி முதல் வீடியோ கான்பரன்சிங் விசாரணை நிறுத்தப்பட்டு, நேரடி விசாரணை தொடங்கும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில் ஒமைக்ரான், கொரோனா 3-வது அலை காரணமாக கோர்ட்டுகளில் வீடியோ கான்பரன்சிங் விசாரணை தொடரும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்தநிலையில் மதுரை ஐகோர்ட்டில் நீதிபதி ஒருவருக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. அவருக்கு பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதிபடுத்தப்பட்டு உள்ளது. இதே போல கோர்ட்டு ஊழியர்கள் சிலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.
மதுரை ஐகோர்ட்டில் நீதிபதி, கோர்ட்டு ஊழியர்கள் உள்பட மதுரை ஐகோர்ட்டு வட்டாரத்தில் மொத்தம் 9 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் கோர்ட்டு ஊழியர்கள் அனைவரையும் பரிசோதனைக்கு உட்படுத்த முடிவு செய்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Next Story