விவசாய மின் இணைப்பு, பெயர் மாற்றம் கேட்டு 100 பேர் மனு
விவசாய நிலத்துக்கு மின் இணைப்பு மற்றும் பெயர் மாற்றம் ேகட்டு 100 ேபர் மனு கொடுத்தனர்.
திருப்பத்தூர்
விவசாய நிலத்துக்கு மின் இணைப்பு மற்றும் பெயர் மாற்றம் ேகட்டு 100 ேபர் மனு கொடுத்தனர்.
ெபயர் மாற்ற முகாம்
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக்கழக திருப்பத்தூர் வட்டம் சார்பாக வெங்களாபுரம் கிராமம் துணைமின் நிலைய வளாக செயற் பொறியாளர் அலுவலகத்தில் புதிய விவசாய மின் இணைப்பு பெற வேண்டி விண்ணப்பம் மற்றும் பெயர் மாற்றம் செய்ய விரும்பும் விவசாயிகள் மற்றும் மின் நுகர்வோர்கள் உரிய வருவாய் ஆவணங்களை வருவாய்த்துறையிடம் ெபற்று பெயர் மாற்றம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி நடந்த சிறப்பு முகாமுக்கு செயற்பொறியாளர் வி.சுப்பிரமணி தலைமை தாங்கினார். உதவி செயற்பொறியாளர் வி.பிரபு வரவேற்றார்.
சிறப்பு முகாமில் திருப்பத்தூர் மாவட்ட மேற்பார்வை பொறியாளர் எம்.பன்னீர்செல்வம் பங்கேற்று, பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பித்த விவசாயிகளுக்கு உடனடியாக அங்கேயே பெயர் மாற்றம் செய்து வழங்கினார். அப்போது மேற்பார்வை பொறியாளர் கூறியதாவது:-
விவசாயிகள் மகிழ்ச்சி
தமிழக முதல்-அமைச்சர் அறிவித்துள்ள ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் விவசாயிகள் மற்றும் மின் நுகர்வோர்களுக்கு சிறப்பு முகாமில் பெயர் மாற்றம், சர்வே எண் மாற்றம், கிணறு மாற்றம், மற்றும் புதிய விவசாய நிலங்களுக்கு மின் இணைப்பு கேட்டு விண்ணப்பிப்பவர்கள் உரிய ஆவணங்கள் அளிக்க வேண்டும்.
அதன்படி முன்னுரிமை அடிப்படையில் மின் இணைப்பு விவசாயிகளுக்கு வழங்கப்படும். தட்கல் முறையிலும் பணம் கட்டி விவசாயிகள் மின் இணைப்புகளை உடனடியாக பெறலாம், என்றார்.
சிறப்பு முகாமில் உதவி செயற்பொறியாளர்கள் எம்.கண்ணன், எம். சந்தானம், உதவி பொறியாளர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
முகாமில் 100 பேர் மனு கொடுத்தனர். அதில் முறையான ஆவணங்களை இணைத்த விவசாயிகளுக்கு முகாமிலேயே பெயர் மாற்றம் செய்து வழங்கப்பட்டதால் மகிழ்ச்சியடைந்தனர்.
Related Tags :
Next Story