அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் பலி


அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் பலி
x
தினத்தந்தி 9 Jan 2022 12:06 AM IST (Updated: 9 Jan 2022 12:06 AM IST)
t-max-icont-min-icon

சீர்காழி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் பலியானார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சீர்காழி:
சீர்காழி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் பலியானார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வாகனம் மோதி முதியவர் பலி
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா கடவாசல் கிராமத்தை சேர்ந்தவர் ராமமூர்த்தி (வயது 62) கூலி தொழிலாளி. இவர் நேற்று அதிகாலை 5 மணி அளவில் தனது சைக்கிளில் வடகாலில் இருந்து குடமுருட்டிக்கு சென்றுள்ளார். அப்போது செல்லும் வழியில் தட்சன் அய்யனார் கோவில் அருகில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி ராமமூர்த்தி படுகாயத்துடன் சாலையில் விழுந்து கிடந்தார். இதனை கண்டவர்கள் ராமமூர்த்தியை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றபோது வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்து விட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த சீர்காழி போலீசார் விரைந்து சென்று ராமமூர்த்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story