பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
பாளையங்கோட்டையில் பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நெல்லை:
பாளையங்கோட்டை இலந்தைகுளம் பகுதியை சேர்ந்தவர் சுந்தர். இவருடைய மகள் முத்துலட்சுமி (வயது 17). இவர் பாளையங்கோட்டையில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் பிளஸ்-2 படித்து வந்தார்.
இவர் அடிக்கடி செல்போனில் விளையாடிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனால் இவருடைய தாய் கிருஷ்ணம்மாள், இவரை கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த முத்துலட்சுமி நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பெருமாள்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story