கூடங்குளம் 2-வது அணு உலையில் மீண்டும் மின் உற்பத்தி
கூடங்குளம் 2-வது அணு உலையில் மீண்டும் மின்உற்பத்தி தொடங்கியது.
வள்ளியூர்:
நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் தலா 1,000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு மின் உற்பத்தி நடைபெறுகிறது. இந்த நிலையில் கடந்த 6-ந்தேதி 2-வது அணு உலையில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக திடீரென்று மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. தொடர்ந்து பழுதை சரி செய்யும் பணியில் அணுமின் நிலைய விஞ்ஞானிகள், ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டனர்.
நேற்று பழுது சரி செய்யப்பட்டு 2-வது அணு உலையில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது. முதல்கட்டமாக 300 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டது. தொடர்ந்து படிப்படியாக மின் உற்பத்தி அதிகரித்து ஓரிரு நாளில் முழு மின் உற்பத்தி செய்யப்படும் என்று அணுமின் நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன. முதலாவது அணு உலையில் 1,000 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story