சேலம் மண்டலத்தில் 600 சிறப்பு பஸ்கள் இயக்கம்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சேலம் மண்டலத்தில் இருந்து 600 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சேலம், ஜன.9-
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சேலம் மண்டலத்தில் இருந்து 600 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சிறப்பு பஸ்கள்
பொங்கல் பண்டிகை வருகிற 14-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வெளியூரை சேர்ந்தவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். பொதுமக்கள் பொங்கல் பண்டிகையை தங்களது சொந்த ஊருக்கு சென்று கொண்டாடுவதற்கு வசதியாக சேலம் மண்டலத்துக்குட்பட்ட சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதாவது, சேலத்தில் இருந்து சென்னை, மதுரை, கோவை, திருச்சி, நெல்லை, நாகர்கோவில், கடலூர் உள்பட பல்வேறு மாவட்டங்களுக்கு 250 சிறப்பு பஸ்கள் இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதேபோல் நாமக்கல்லில் 100 பஸ்களும், கிருஷ்ணகிரியில் 150 பஸ்களும், தர்மபுரியில் 100 பஸ்களும் இயக்கப்படுகிறது.
96 சதவீதம்
இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறும் போது, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சேலம் மண்டலமான சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் இருந்து 600 சிறப்பு பஸ்கள் இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கொரோனா பரவலை தொடர்ந்து தற்போது ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையில் நாளை மறுநாள் (நாளை) ஊரடங்கு குறித்த புது அறிவிப்புகள் வருவதை பொறுத்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படலாம். டிரைவர்கள், கண்டக்டர்கள் உள்பட போக்குவரத்து ஊழியர்கள் 96 சதவீதம் பேர் 2 தவணை கொரோனா தடுப்பூசியும் செலுத்தி விட்டனர். டிரைவர்கள், கண்டக்டர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளோம் என்றனர்.
Related Tags :
Next Story