தொடர்ந்து அதிகரிப்பு: கொரோனா தொற்றால் ஒரே நாளில் 591 பேர் பாதிப்பு
திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
திருவள்ளூர்,
கடந்த 4 நாட்களாக மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு 100 மற்றும் 200 ஆக இருந்தநிலையில், தற்போது மீண்டும் தொற்று அதிகரித்து நேற்று கொரோனா தொற்றால் 591 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இதுவரையில் 1 லட்சத்து 23 ஆயிரத்து 6 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் 1 லட்சத்து 19 ஆயிரத்து 33 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். மருத்துவமனையில் 2,107 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றால் 1,866 பேர் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story