மலை ரெயிலில் சுற்றுலா பயணிகள் கூட்டம் குறைந்தது
முழு ஊரடங்கிலும் மேட்டுப்பாளையம்- ஊட்டி இடையே இயக்கப் பட்ட மலை ரெயிலில் சுற்றுலா பயணிகள் கூட்டம் குறைவாக இருந்தது. அவர்கள் வாடகை வாகனங்கள் கிடைக்கா மல் அவதி அடைந்தனர்.
ஊட்டி
முழு ஊரடங்கிலும் மேட்டுப்பாளையம்- ஊட்டி இடையே இயக்கப் பட்ட மலை ரெயிலில் சுற்றுலா பயணிகள் கூட்டம் குறைவாக இருந்தது. அவர்கள் வாடகை வாகனங்கள் கிடைக்கா மல் அவதி அடைந்தனர்.
மலை ரெயில் இயக்கம்
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த நேற்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் அத்தியாவசிய பணிகளுக்காக செல்லும் சரக்கு வாகனங்கள் செல்ல அனுமதிக்கப் பட்டது.
முழு ஊரடங்கிலும் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வழியாக ஊட்டிக்கு மலை ரெயில் இயக்கப்பட்டது. மேட்டுப் பாளையத்தில் இருந்து 80 பேர் பயணம் செய்தனர். 4 பெட்டி களில் 180 இருக்கைகள் இருந்தன.
குன்னூரில் கூடுதலாக ஒரு பெட்டி இணைக்கப்பட்டு, மேலும் 30 பேர் ஏறினர். மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே இயக்கப்பட்ட மலை ரெயிலில் சுற்றுலா பயணிகள் 110 பேர் பயணம் செய்தனர். 110 இருக்கைகள் காலியாக கிடந்தது.
சுற்றுலா பயணிகள் அவதி
ஊட்டியில் சுற்றுலா தலங்கள் மூடப்பட்டு, வாகன போக்குவரத்து இல்லாததே காரணமாகும். ஊட்டி-மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்பட்ட மலை ரெயிலில் சுற்றுலா பயணிகள் கூட்டம் கணிசமாக இருந்தது. ஆனால், ஊட்டி-குன்னூர் இடையே மலை ரெயிலில் சுற்றுலா பயணிகள் மிகவும் குறைந்த எண்ணிக்கையில் பயணம் செய்தனர்.
ஊட்டி ரெயில் நிலையத்தில் வந்திறங்கிய சுற்றுலா பயணிகள் தாங்கள் தங்கும் விடுதிகளுக்கு சென்று தங்க வாடகை வாகனம், ஆட்டோக்கள் இல்லாமல் அவதி அடைந்தனர். அவர்கள் செல்ல வாகனம் கிடைக்குமா என்று சுற்றித் திரிந்தனர்.
சிலர் கை குழந்தைகளோடு அலைந்ததை காணமுடிந்தது. இதனால் அவர்கள் கடும் அவதியடைந்தனர்.
கூட்டம் குறைவாக இருந்தது
ரெயில் டிக்கெட்டை போலீசாரிடம் காண்பித்து நடந்து சென்றனர். உணவகங்களில் பார்சல் மட்டும் வினியோகிக்கப்பட்டதால், சில சுற்றுலாப் பயணிகள் அம்மா உணவகத்தில் மதிய உணவு அருந்தினர்.
இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறும்போது, மலை ரெயிலில் பயணிக்க சுற்றுலா பயணிகள் பலர் முன்பதிவு செய்ததால் வார விடுமுறை நாட்களில் நிரம்பி வழிகிறது. கடந்த 5-ந் தேதி புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டதால் நேற்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது.
இதனால் பலர் முன்பதிவு செய்த டிக்கெட்டை ரத்து செய்ததோடு, பயணத்தை தவிர்த்து உள்ளனர். இதனால் கூட்டம் குறைவாக இருந்தது என்றனர்.
Related Tags :
Next Story