ஊட்டி அருகே சேற்றில் சிக்கிய காட்டெருமை மீட்பு


ஊட்டி அருகே சேற்றில் சிக்கிய காட்டெருமை மீட்பு
x
தினத்தந்தி 9 Jan 2022 8:38 PM IST (Updated: 9 Jan 2022 8:38 PM IST)
t-max-icont-min-icon

ஊட்டி அருகே சேற்றில் சிக்கிய காட்டெருமை மீட்பு

ஊட்டி

ஊட்டி அருகே கேத்தி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் காட்டெருமை, கரடி நடமாட்டம் அதிகமாக உள்ளது. இந்த நிலையில் நேற்று கேத்தி சாந்தூர் பகுதியில் விளைநிலங்களை ஒட்டி ஒற்றை காட்டெருமை புற்களை மேய்ந்து கொண்டிருந்தது. 

அப்போது விளைநிலம் அருகே இருந்த சேற்றில் காட்டெருமையின் கால் சிக்கிக்கொண்டது. இதனால் காட்டெருமை வெளியே வர முடியாமல் தவித்தது.  இதுகுறித்து குந்தா வனச்சரகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

 அதன் பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து கயிறு கட்டியும், சத்தம் போட்டும் காட்டெருமையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். 2 மணி நேரத்திற்குப்பின்னர் காட்டெருமை மீட்கப்பட்டது. 

அது 14 வயதான ஆண் காட்டெருமை என்பது தெரியவந்தது. பின்னர் அந்த காட்டெருமை வனப்பகுதிக்குள் சென்றது.


Next Story