220 லிட்டர் சாராயம் பறிமுதல்


220 லிட்டர் சாராயம் பறிமுதல்
x
தினத்தந்தி 9 Jan 2022 8:58 PM IST (Updated: 9 Jan 2022 8:58 PM IST)
t-max-icont-min-icon

மோட்டார் சைக்கிள்களில் கடத்தி வந்த 220 லிட்டர் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

நாகூர்:
நாகூர் அருகே முட்டம் பஸ் நிலையம் அருகில் நேற்று முன்தினம் இரவு நாகூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட னர். அப்போது அந்த வழியாக வந்த 2 மோட்டார் சைக்கிள்களை நிறுத்த போலீசார் கைகாட்டினர். ஆனால் மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேர் போலீசாரை பார்த்ததும் மோட்டார் சைக்கிள்களை அங்கேயே போட்டு விட்டு தப்பி ஓடிவிட்டனர். இதை தொடர்ந்து மோட்டார் சைக்கிள்களில் இருந்த மூட்டைகளை போலீசார் பிரித்து பார்த்த போது அதில் சாராய பாக்கெட்டுகள் இருந்தன. தப்பி ஓடியவர்கள் காரைக்கால் பகுதியில் இருந்து மோட்டார் சைக்கிள்களில் சாராயம் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து 2 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 220 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய 4 பேரையும் வலைவீசி தேடிவருகின்றனர்.

Next Story