மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருந்த 2 பேர் கைது


மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருந்த 2 பேர் கைது
x
தினத்தந்தி 9 Jan 2022 10:03 PM IST (Updated: 9 Jan 2022 10:03 PM IST)
t-max-icont-min-icon

கூடலூரில் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

கூடலூர்:
கூடலூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துமணி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் மற்றும் போலீசார் பழைய பஸ் நிலையம் பகுதியில் ரோந்து சென்றனர். 
அப்போது அங்கு சந்தேகப்படும் வகையில் 2 பேர் நின்று கொண்டிருந்தனர். அவர்களை பிடித்து போலீசார் விசாரித்ததில், அவர்கள் டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்களை மொத்தமாக விலைக்கு வாங்கி, கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. 
மேலும் அவர்கள், கூடலூர் எம்.ஜி.ஆர். காலனியை சேர்ந்த ஜெயக்குமார் (வயது 47), சுரேஷ்குமார் (49) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 200 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Next Story